Mayu / 2024 ஜூலை 30 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியிலுள்ள நிறமூட்டும் தொழிற்சாலையில் நீண்ட காலமாக போதைப்பொருள் பாவனை நடைபெற்று வருவதாக பொலிஸாருக்கு கடந்த திங்கட்கிழமை(29) இரவு இரகசிய தகவல் கிடைக்கப் பெற்றிருந்தது.
இதற்கமைய செயற்பட்ட பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க தலைமையிலான பொலிஸார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டதுடன் ஐஸ் போதைப்பொருளை நுகர்ந்த 4 சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்கள் 20, 18, 17, 17, வயது மதிக்கத்தக்கவர்கள் என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து மீட்கப்பட்ட போதைப் பொருட்கள் சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்காக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
பாறுக் ஷிஹான்
6 minute ago
17 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
46 minute ago