2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

ஐஸ் போதைப்பொருளுடன் இளம் வியாபாரிகள் கைது

Janu   / 2025 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு கொண்டுவரப்பட்ட போதை பொருளை வியாபாரத்திற்காக எடுத்து சென்ற இருவர் புதன்கிழமை (20) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

மட்டு. தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸார்,  நகர் பகுதி திருகோணமலை வீதியில் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கொழும்பில் இருந்து  பேருந்தில் வந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் போதை பொருளை கொண்டு வந்து குறித்த வியாபாரிகளிடம் வழங்கிய நிலையில் அதனை வாங்கி கொண்டு வரும்போது சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பூம்புகார் லயன்ஸ் கிளப் வீதி மற்றும் கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய  இளைஞர்கள் எனவும் அவர்களிடமிருந்து 3700 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருள், ஒரு இலச்சத்து 20 ஆயிரத்து 640 ரூபாய் பணம், 2 கையடக்க தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 கனகராசா சரவணன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .