Editorial / 2022 மார்ச் 07 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்
காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியான 06 ஒட்சிசன் பிறப்பாக்கி இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சனிக்கிழமை (05) இரவு நடைபெற்றது.
இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கிவைக்கப்பட்ட குறித்த இயந்திரத்தை காத்தான்குடி பத்ரிய்யாஹ் ஜும்ஆப் பள்ளிவாசலின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபிரிடம் கையளித்திருந்தனர்.
இந்நிகழ்வு, வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபிர் தலைமையில் இடம்பெற்றதுடன், பத்ரிய்யாஹ் ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள், வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், தாதி உத்தியோகத்தர்கள் என பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .