Suganthini Ratnam / 2016 ஜூன் 30 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
தற்போது மாணவர்கள் மத்தியில் ஒருவகையான போதை கலந்த மாத்திரைகள்; அறிமுகமாகி வருவதாக தெரியவருகின்றது. இது தொடர்பில் பெற்றோரும் ஆசிரியர்களும் சிறுவர் அபிவிருத்திக்காக வேலை செய்யும் உத்தியோகஸ்தர்களும் அவதானமாக இருக்க வேண்டும் என காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், வைத்தியர் எம்.எஸ்.எம்.ஜாபீர் தெரிவித்தார்.
காத்தான்குடிப் பிரதேச செயலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தின்போதே, அவர் இதனைக் கூறினார்.
தங்கள் பிள்ளைகளின் பாடசாலைப் பைகளை அடிக்கடி பெற்றோர் பார்வையிட வேண்டும் என்பதுடன், அவர்களின் நடவடிக்கைகளையும் அவதானிக்க வேண்டும்.
போதை மாத்திரைகள் விற்பனை செய்யும் இடங்கள் தொடர்பான தகவல்களைத் பெறுவதுடன், அவற்றை விற்பனை செய்வோரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago