Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 ஜூலை 30 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா. கிருஷ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்துக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்டத்தின் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன், மாவட்டச் செயலகத்தில் நேற்று (29) இடம்பெற்றது.
மாவட்டச் செயலாளர் கே. கருணாகரனின் ஏற்பாட்டில், பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி மற்றும் மனைசார் கால்நடை வளர்ப்பு, சிறு பொருளாதாரப் பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான நஸீர் அஹமட், கோவிந்தன் கருணாகரம், இரா.சாணக்கியன் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.
இதன்போது, மாவட்டத்தின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், சமுர்த்தி, சுற்றாடல் உட்பட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் ஆராயப்பட்டதுடன், அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இவற்றில் கிழக்கு மாகாண சபையின் ஒதுக்கீட்டிலான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago
2 hours ago
11 May 2025