2025 மே 05, திங்கட்கிழமை

ஒரேநாளில் 19 கொரோனா உடல்கள் அடக்கம்

Princiya Dixci   / 2021 மே 17 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை பகுதியில் கடந்த சனிக்கிழமை மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த 19 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக, ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

அத்துடன், சூடுபத்தினசேனை பகுதியில் இதுவரைக்கும் 156  உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்த நிலையில், ஓட்டமாவடி பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று (16) மாலை நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சூடுபத்தினசேனையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் 156 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. இதில் 2 வெளிநாட்டவர்கள், பௌத்த மதத்தவர் ஒருவர், இந்துக்கள் மூவர், கிறிஸ்தவர் 6 பேரின் உடல்கள் அடங்களாக 154 இஸ்லாம் மதத்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

மேலும், ஓட்டமாவடி பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்காத வகையில் அனைத்துத் தரப்பினரும் சுகாதாரத் திணைக்களத்துக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும், வெளி இடங்களில் இருந்து வருகை தந்தால் சுகாதாரத் திணைக்களத்துக்குத் தெரியப்படுத்தி, பிரதேசத்தைக் காப்பாற்ற முன்வருமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X