Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
ரீ.எல்.ஜவ்பர்கான் / 2019 ஏப்ரல் 02 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகளாவிய ரீதியில் இஸ்லாமியர்களுகெதிரான சவால்கள் அதிகரித்திருக்கின்றன எனக் கூறிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுத்தீன், யுத்தத்தின் பின்னர், இலங்கையிலும் முஸ்லிம்கள் பல்வேறு அவலங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்றார்.
அவற்றைத் தடுப்பதற்கு, அரசியல் தலைமைகளோ, அரசியல் கட்சிகளோ, சிவில் சமூக அமைப்புகளோ, புத்திஜீவிகளோ ஒன்றுபடவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
ஓட்டமாவடியில் இடம்பெற்ற வைபவமொன்றில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், முஸ்லிம் சமூகத்துக்கெதிரான போலியான குற்றச்சாட்டுகள், இனவாதிகளால் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன எனவும் அவற்றைத் தடுப்பதற்கோ, தட்டிக்கேட்பதற்கோ, எத்தகைய திட்டங்களும் முஸ்லிம் தலைமைகளால் தீட்டப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், யுத்த நிறைவின் பின்னர், இந்த நாட்டிலே முஸ்லிம்களுக்கு வந்திருக்கும் சவால்களை, சமூகத்தலைமைகள் கண்டும் காணாமல் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago