Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட ஓட்டமாவடி வலயக்; கல்வி அலுவலகப் பிரிவிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவிகள் 16 பேர் திடீர் சுகவீனம் காரணமாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை மதியம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவ்வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
குறித்த பாடசாலையில் தரம் -05இல் கல்வி கற்கும் இம்மாணவிகளே திடீர் சுகவீனம் அடைந்துள்ளனர். தங்களுக்கு சிறுநீர் சிவப்பு நிறத்தில் வெளியேறுவதுடன், வயிற்றுவலியும் காணப்படுதாக தங்களின் வகுப்பு ஆசிரியையிடம் இம்மாணவிகள் கூறியுள்ளனர்.
இதனை அடுத்து குறித்த மாணவிகளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில், இவர்களின் இரத்த மாதிரி பெறப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன் வைத்தியப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே இந்நோய் தொடர்பில் தெரியவருமென வைத்தியசாலை அதிகாரி ஒருவர் கூறினார்.
14 minute ago
29 minute ago
32 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
29 minute ago
32 minute ago
47 minute ago