2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஓட்டோ சங்கத்தினர் ஆளுநரைச் சந்தித்தனர்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 பெப்ரவரி 25 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு ஓட்டோ சாரதிகள் நலன்புரிச் சங்கத்தினர், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை, நேற்றுச் (24) சந்தித்து, தமது பிரச்சினைகளை எடுத்துக் கூறியதாக, அச்சங்கத்தின் தலைவர் எஸ். ஜேசுதாஸ் தெரிவித்தார்

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட  பகுதியில் தொழில்  ரீதியாக சேவையிலீடுபடுகின்ற ஓட்டோக்களின் தரிப்பிடம் தொடர்பில், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளருடனும் மாநகர மேயருடனும் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள்  தொடர்பாகவே, ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தாம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளைக்  கவனத்தில் எடுத்துக்கொண்ட ஆளுநர், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி, சுமுகமான  தீர்வைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்துள்ளார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X