Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Princiya Dixci / 2021 செப்டெம்பர் 30 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, வ.சக்தி
தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பகுதி ஓட்டோ சாரதிகளுக்கு ஒரு தொகை நிவாரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனால் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.
தொடர்ச்சியான தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக ஓட்டோ சாரதிகள் வருமானம் இன்றி மிகவும் கஷ்டங்களை எதிர்நோக்கி வந்தனர்.
குறிப்பாக, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பகுதிக்குட்பட்ட பாலையடிவட்டை, சின்னவத்தை மற்றும் ஆனைகட்டியவெளி உட்பட பல பின்தங்கிய பகுதிகளை சேர்ந்த ஓட்டோ சாரதிகள் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இவர்களின் நன்மை கருதி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் போரதீவுப்பற்று பிரதேச அமைப்பாளர் தயானந்தன் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, தலா 2,000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
சிவநேசதுரை சந்திரகாந்தன் எம்.பி, பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இவற்றை வழங்கிவைத்தார்.
மேற்படி பகுதியைச் சேர்ந்த சுமார் 48 ஓட்டோ சாரதிகளுக்கான உலர் உணவுப்பொதிகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
02 Jul 2025