2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஓட்டோ விபத்து; ஒருவர் பலி; ஒருவர் காயம்

Editorial   / 2020 ஜூன் 09 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எம்.அஹமட் அனாம், எச்.எம்.எம்.பர்ஸான்

வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஓட்டோவொன்று குடைசாய்ந்ததில் அதில் பயணம் செய்த காத்தான்குடி, கபுறடி வீதியைச் சேர்ந்த முஹம்மது ஹனிபா இர்பான் (வயது 32) என்பர் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு – திருகோணமலை வீதி, மாங்கேணியில் இன்று (09) இந்த விபத்துச் சம்பவித்துள்ளதாகவும் சடலம், பிரேதக் கூறாய்வுப் பரிசோதனைகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்த மற்றையவரான அப்துல் றஹுமான் லத்தீப் (வயது 54) என்பவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து தொடர்பாக வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .