2025 மே 10, சனிக்கிழமை

ஓட்டோவில் கஞ்சா; இருவர் கைது

Princiya Dixci   / 2022 மார்ச் 30 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

காத்தான்குடியில் இருந்து கருவப்பங்கேணி பிரதேசத்துக்கு ஓட்டோவில் கேரளா கஞ்சாவை எடுத்துச் சென்று விற்பனையில் ஈடுபட்ட கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரை, நேற்று (29) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலையடுத்து, மட்டு. தலைமையக பொலிஸ் நிலையப் பெரும் குற்றத்தடுப்பு பிரிவினருடன் மாவட்ட புலனாய்வு பிரிவினரும் இணைந்து குறித்த பகுதியில் உள்ள வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது கேரளா கஞ்சாவை வியாபாரத்துக்கு ஓட்டோவில் எடுத்து வந்த இருவரையும் மடக்கிபிடித்து கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து 90 கிராம் கேரளா கஞ்சா மற்றும் ஓட்டோவையும் கைப்பற்றினர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழடித்தீவு மற்றும் வீட்டுத்திட்டப் பகுதியைச் சேர்ந்த 46 மற்றும் 37 வயதுடையவர்கள் எனவும் காத்தான்குடி, கர்ப்பலா பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கிக்கொண்டு கருவப்பங்கேணி பிரதேசத்துக்கு விற்பனைக்கு எடுத்துச் சென்றதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X