Suganthini Ratnam / 2017 ஜனவரி 16 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
2014ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட 67 பேர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர் என அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.ஜாபீர் தெரிவித்தார்.
காத்தான்குடி நகர சபையில் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறினார்.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் அலகு ஆரம்பிக்கப்பட்ட 2014ஆம் ஆண்டில் 14 பேரும் 2015ஆம் ஆண்டில் 5 பேரும் 2016ஆம் ஆண்டில் 45 பேரும் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில்; 3 பேரும் குடும்ப வண்முறைகளால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
இந்த வன்முறைகளின் பின்னணியை ஆராய்ந்தபோது, 82 சதவீதமான சம்பவங்களுக்கு புகைத்தல் மற்றும் போதைவஸ்துப் பாவனையே காரணமாக அமைகின்றன எனவும் தெரியவந்துள்ளது.
மேலும், மாதாந்தம் 350 உள நோயாளர்கள் இவ்வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். இந்நிலையில், கடந்த வருடம் இவ்வைத்தியசாலையில் 'உறவின் உதயம்' எனும் விடுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் சிகிச்சை பெறும் உள நோயாளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் போதைவஸ்துப் பாவனையில் ஈடுபட்டுள்ளனர் என்று வைத்தியசாலையின் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன எனவும் அவர் கூறினார்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago