2025 மே 13, செவ்வாய்க்கிழமை

காணாமல் போயிருந்த 2 1/2 வயது சிறுமி மீட்பு

Sudharshini   / 2016 மார்ச் 12 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

புதிய காத்தான்குடி, அல் அமீன் வீதியைச் சேர்;ந்த இரண்டரை வயதுச் சிறுமி வெள்ளிக்கிழமை (11) காணாமல் போயிருந்த நிலையில், அன்றைய தினமே பாலமுனை பகுதியில் வைத்து சிறுமி, பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி சிறுமி, காத்தான்குடியிலிருந்து மூன்று கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள பாலமுனை பிரசேத்தின் ஜி.எஸ்.வீதியில் வைத்தே மீட்கப்பட்டுள்ளார். இப்பகுதியில் சிறுமியொருவர் தனியாக நின்று அழுதுக்கொண்டுடிருப்பதை  அவதானித்த அப்பகுதி மக்கள், சிறுமி தொடர்பில் காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்;.

குறித்த இடத்து வந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ரி.ஜெயசீலன் தலைமையிலான பொலிஸ் குழுவினர், சிறுமியை மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும், குறித்த சிறுமியின் பெற்றோரை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டதையடுத்து, சிறுமியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X