2025 மே 13, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடியிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்புத்தொகை

Suganthini Ratnam   / 2016 மார்ச் 16 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கிவரும் மாதாந்த சம்பளப் பிரச்சினைக்கு இடைக்காலத் தீர்வாக ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்குவதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது.

ந.தே.முன்னணியின் ஏற்பாட்டில் காத்தான்குடி மற்றும் அதனைச் சூழவுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுடனான கலந்துரையாடல்;, காத்தான்குடியிலுள்ள அதன் பிராந்தியக் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (15) மாலை நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக ந.தே.முன்னணியின் தவிசாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

எதிர்வரும் இரண்டு வாரகாலத்துக்குள்; இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும். அத்துடன், முன்பள்ளி ஆசிரியர்களின் தொழில்சார் டிப்ளோமா பாடநெறிக்கான சகல வசதிகளையும் ந.தே.மு செய்து கொடுப்பதற்கு உத்தேசித்துள்ளது.  
மேலும், கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளிகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் உயர்மட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசெல்லவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X