2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கோயில் போரதீவில் தையல் பயிற்சி நிலையம்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 27 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-த.தவக்குமார்

மட்டக்களப்பு மாவட்டத்தில்  கோயில் போரதீவு பிரதேசத்தில் சகல வசதிகளையும் கொண்ட நவீன முறையிலான தையல் பயிற்சி நிலையம் ஒன்று அமைக்கப்பட இருப்பதாக பட்டிருப்பு தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும் வணிகத்துறை அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகரும் கல்வியமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட கல்வி அபிவிருத்தி இணைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இப்பிரதேசத்தில் நீண்டகாலங்களாக நிலவி வருகின்ற இளைஞர், யுவதிகளின் வேலையில்லா பற்றாக்குறைக்கு தீர்வுகாணும் பொருட்டு சகல வசதிகளையும் கொண்ட தையல் பயிற்ச்சி நிலையம் ஒன்றினை விரைவில் இப்பிரதேசத்திலே அமைக்கவுள்ளதாகவும் இப்பயிற்சிகளை மேற்கொள்ளும் அனைவருக்கும் தையல் இயந்திரங்களை  வழங்கி அவர்கள் தானாகவே தங்களின் தொழிகளை மேற்கொள்ள வழியமைத்து கொடுக்க இருப்பதாகவும்  இவ்விடயம் சம்மந்தமாக உரிய அமைச்சினுடன் கலந்துரையடியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X