2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கிரானில் 380 அங்கவீனர்கள்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 04 , மு.ப. 11:13 - 1     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் தமது தரவின் அடிப்படையில் அங்கவீனமான 380 பேர் உள்ளதுடன்,  இவர்களில் 32 பேர் சக்கர கதிரைகளிருந்து  செயற்படுகின்றனர் என அப்பிரதேச செயலகத்தின் சமூக சேவைப் பிரிவு தெரிவித்தது.  

இவர்கள் யுத்தம் மற்றும் அனர்த்தங்கள் காரணமாகவே அங்கவீனமாகியுள்ளனர். அங்கவீனமாகி நடமாட முடியாதவர்களுக்கு  சமூக சேவைத் திணைக்களத்தால் சக்கரக் கதிரைகள் வழங்கப்படுகின்றன.

அத்துடன், இப்பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த அங்கவீனமான 65 பேருக்கு அரசாங்கத்தால் மாதாந்தம் வழங்கப்படும் 3,000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்கின்றன. மேலும், 65 பேர் இக்கொடுப்பனவை  பெறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.
இவற்றை விட சிலருக்கு வீடுகள், மலசலகூட வசதிகள், வாழ்வாதார உதவிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன எனவும் அப்பிரிவு தெரிவித்தது.

இவ்வாறிருக்க, யுத்தம் காரணமாகப்; பாதிக்கப்பட்டு அங்கவீனமானவர்களுக்கு குறிப்பாக, முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு கிரான் பிரதேசத்தில் அங்கவீனமானோருக்கான 'புதியபாதை' என்ற அமைப்பின் செயலாளர் யோ.ஜெகதீஸ்வரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 


  Comments - 1

  • M s a nilam Deen Sunday, 31 December 2017 07:15 AM

    எனது கருத்தாவது இலங்கையில் வெறும் பெயருக்குத்தான் அங்கவீனர்கள் நலன்களைப் பற்றி பெரும் குரல்கள் எழுப்புகிறார்களே தவிர வேறு என்னசெய்துவிடர்கள்? இவர்கள் ஆட்சி செய்தாலும் அங்கவீனராகிய எமக்கு எதுவித பயனுமில்லை. இயன்றவர்களுக்கும் உள்ளவர்களுக்கும் தான் இவர்கள் நியதி. யாரை நம்புவது... உங்கள் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஓர் அங்கவீனன்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X