2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கௌரவிப்பு நிகழ்வு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 24 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

பொலிஸ் திணைக்களத்தில் சிறந்த சேவையாற்றிவரும் பொலிஸாரை கௌரவிக்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த சேவையாற்றிவரும் பொலிஸாரை கௌரவிக்கும் பொலிஸ் வெகுமதி பெருவிழா நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.பி.திணேஸ் கருணாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்; மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜெயக்கொடி ஆராய்ச்சி,  மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி ஆணையாளர் எஸ்.தனஞ்சயன் உட்பட பொலிஸ் அதிகாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸ் திணைக்களத்தில் பல்வேறு துறைகளிலும் சிறந்த சேவையாற்றிய 58 பேர் பணப்பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். குற்றத்தடுப்பு, ஊழல் மோசடி தடுப்பு, போதைவஸ்து ஒழிப்பு என பல்வேறு பிரிவுகளிலும் சிறப்பாக தமது கடமையை நிறைவேற்றி பொலிஸ் திணைக்களம் மேற்கொண்ட மதிப்பீட்டில் தெரிவு செய்யப்பட்ட 58 பொலிஸாருக்கு பணப்பரிசில்கள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X