2025 மே 26, திங்கட்கிழமை

கால்நடைகளுக்காக குளம் புனரமைக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2017 மே 17 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு, மயிலத்தமடுக் கிராமத்தில்;; கால்நடைகளின் நலன் கருதி தூர்ந்துபோன குளமொன்றைப் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என  கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

இக்கிராமத்தில் கால்நடைகளுக்கு போதியளவான நீர் வசதியின்றி காணப்படும் நிலையில் அவற்றைப் பராமரிப்பதில் கால்நடை வளர்ப்பாளர்கள் சிரமத்தை எதிர்நோக்கி வந்தனர்.

இது தொடர்பில் தன்னிடம் மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் தெரியப்படுத்தினர்.

இதனை அடுத்து, தூர்ந்துபோன  குளமொன்றைப் புனரமைத்து   கால்நடைகளுக்கு நீர் அருந்துவதற்கு வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்நிலையில், கமநல சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி ஆணையாளர் என்.சிவலிங்கம், தான் உட்பட சிலர்  மயிலத்தமடுக் கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை (16) விஜயம் செய்து தூர்ந்துபோன அக்குளத்தைப் புனரமைப்பதற்காக பார்வையிட்டதாகவும் அவர் கூறினார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X