Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 14 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தைக் கண்டித்தும் கொலையாளிகளைக் கண்டுபிடிக்குமாறு கோரியும் கவனயீர்ப்புப் போராட்டம், ஏறாவூர் பள்ளிவாசலுக்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (13) இரவு முன்னெடுக்கப்பட்டது.
ஏறாவூர் சமூகசேவை அமைப்பு, பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் ஏற்பாட்டில் இக்கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இக்கொலையைக்; கண்டித்தும் துக்கம் அனுஷ்டிக்கும் வகையிலும் முகமாகவும் மேற்படி பிரதேசத்திலுள்ள தெருக்கடைகளில் வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்ததுடன், அப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் 'கண்ணீருடன் ஏறாவூர்', 'ஆழ்ந்த துயரத்தில் ஏறாவூர்' போன்றவாறு எழுதப்பட்ட வாசகங்களும் அங்கு காணப்பட்டன.
இவ்வாறிருக்க ஏறாவூர் பிரதேசத்திலுள்ள முகாந்திரம் வீதியை அண்டியுள்ள வீடொன்றில் கொலை செய்யப்பட்ட தாயான நூர்முஹம்மது ஹுஸைரா (வயது 56) மற்றும் அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பாணு (வயது 32) ஆகியோரின் ஜனாஸாக்கள் பிரேத பரிசோதனையின் பின்னர் செவ்வாய்க்கிழமை இரவு நல்லடக்கம் செய்யப்பட்டன.
தாயினதும் மகளினதும் உடற்பாகங்கள் மற்றும் இரத்த மாதிரி இரசாயனப் பகுப்பாய்வுக்காக கொழும்பு இரசாயானப் பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான அறிக்கை 3 வாரகாலத்துக்குள் கிடைக்குமெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இருவரும் தங்களது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது, பலகையொன்றினால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) சடலங்களாக மீட்கப்பட்டன.

15 minute ago
16 minute ago
36 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
16 minute ago
36 minute ago
3 hours ago