2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கிழக்குப் பிராந்தியத்துக்கு புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 12 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கிழக்குப் பிராந்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட சுமித் எதிரிசிங்க இன்று திங்கட்கிழமை கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், இவருக்கு மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரினால் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்போது, பொலிஸ் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.
இதுவரைகாலமும் மாத்தறையில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக இவர் கடமையாற்றி வந்தார்.

இதேவேளை, கிழக்குப் பிராந்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிவந்த எல்.ஏ.ஜயசிங்க கண்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X