Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
1990ஆம் ஆண்டு யுத்த சூழ்நிலையின்போது, உயிர் அபாயம் கோரி கிழக்குப்
பல்கலைக்கழகத்தில் தஞ்சம் அடைந்திருந்தபோது, விசாரணைக்காக என்று கூறி இராணுவத்தினரால் அழைத்துச்செல்லப்பட்டு காணாமல் போனோரின் 26ஆவது வருட நினைவுதினம் இன்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிலையில், கொம்மாதுறை ஸ்ரீசித்தி விநாயகர் கோவிலில் காணாமல் போனோரின் உறவினர்கள் ஒன்றுகூடி விசேட பூஜையிலும் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.
1990 ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழத்தில் தஞ்சம் அடைந்திருந்த 158 இளைஞர்களை குடும்ப உறவினர்களின் முன்னிலையில் விசாரணைக்காக என்று கூறி பஸ்களில் இராணுவத்தினர் அழைத்துச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு சமாதானக்குழு உட்பட பலரிடமும் முறைப்பாடு செய்திருந்தபோதிலும், இவர்களுக்கு என்ன நடந்தது என்று இதுவரையில் தெரியவில்லை எனவும் கூறப்படுகின்றது.

29 minute ago
31 minute ago
39 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
31 minute ago
39 minute ago
48 minute ago