Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 12 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
கிழக்கு மாகாணத்தில் 28 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ள நிலையில், அவர்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என அம்மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலேயே அதிகளவான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளான 2,979 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளனர்.
மேலும், யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளாகியோர் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அதிகளவில் உள்ளனர் எனவும் அவர் கூறினார்.
கிழக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வு, மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'மாற்றுத்திறனாளிகளுக்காக எதிர்காலத்தில் அதிகளவான நிதியை ஒதுக்கவேண்டிய தேவைப்பாடு சமூகசேவைகள் அமைச்சுக்கு உள்ளது. கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களத்துக்கு குறைந்தளவு நிதியே ஒதுக்கீடு செய்யப்படுகின்றது' என்றார்.
'மாற்றுத்திறனாளிகளை நாங்கள் உற்சாகப்படுத்த வேண்டும். இதற்காக அதிகளவான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆகவே, 2017ஆம் ஆண்டு வரவு -செலவுத் திட்டத்தில் சமூகசேவைகள் திணைக்களத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று முதலமைச்சரிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்' எனவும் அவர் கூறினார்.
17 minute ago
18 minute ago
38 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
18 minute ago
38 minute ago
3 hours ago