Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
தற்போது கிழக்கு மாகாணத்திலிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்வதற்காக 102 வைத்தியர்கள் இடமாற்றம் கோரியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தன் தெரிவித்தார்.
இவர்களின் இடமாற்றத்தை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு இடமாற்றம் வழங்கினால், இன்னும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படுமெனவும் அவர் கூறினார்.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள இரத்த வங்கி மற்றும் விசேட வைத்திய நிபுணர்களுக்கான விடுதிக் கட்டடங்களுக்;கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார்.
கடந்த வருடம் கிழக்கு மாகாணத்தில் 98 வைத்தியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், இந்த வருடம் 102 வைத்தியர்கள் இடமாற்றம் கோரியுள்ளனர்.
கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு 110 வைத்தியர்கள் தேவையாக உள்ளனர். மேலும், இம்மாகாணத்தில் 12 ஆதார வைத்தியசாலைகளுக்கு விசேட வைத்திய நிபுணர்கள் 36 பேர் தேவையாக உள்ளனர்.
இம்மாகாணத்தில் 36 மருந்து வழங்குநர்களும் 52 மருந்துக் கலவையாளர்களும் தேவையாக உள்ளனர் எனவும் அவர் கூறினார்.
இதேவேளை, இங்கு உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட சுகாதாரப் பிரதிப் பணிப்பாளர், டாக்டர் திருமதி என்.கிறேஸ், 'மட்டக்களப்பு மாவட்டத்தில் 06 வைத்தியசாலைகள் ஒரு வைத்தியரை மாத்திரம் கொண்டு இயங்கி வருகின்றது. இந்த வைத்தியசாலைகளில் ஒரு வைத்தியரை மாத்திரம் கொண்டு 24 மணி நேரமும் வைத்திய சேவையை வழங்க வேண்டிய மிகக் கஷ்டமான நிலை காணப்படுகின்றது.
இப்பிரச்சினையைத் தீர்த்துத்தருமாறு பல தடவைகள் சுகாதார அமைச்சிடமும் சுகாதாரத் திணைக்;களத்திடமும் நாம் கேட்;டிருந்தோம்' என்றார்.

1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago