2025 மே 26, திங்கட்கிழமை

கைவிடப்பட்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிள் மீட்பு

Princiya Dixci   / 2017 மே 15 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பிரதேச வீதியில் கைவிடப்பட்டிருந்த நிலையிலிருந்த மோட்டார் சைக்கிளொன்றை, இன்று காலை மீட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பிரதேசத்திலுள்ள மாரியம்மன் கோவில் வீதியிலுள்ள மாரியம்மன் கோவிலுக்கு அருகாமையில் கடந்த இரண்டு தினங்களாக அடையாளம் காணப்படாமல் மோட்டார் சைக்கிள் ஒன்று இருப்பதாக காத்தான்குடி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து குறித்த இடத்துக்குச் சென்ற காத்தான்குடி பொலிஸார், மோட்டார் சைக்கிளை மீட்டு பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

EUUF1259 எனும் இலக்கமுடைய இந்த மோட்டார் சைக்கிள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X