2025 மே 19, திங்கட்கிழமை

கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை ; சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை

வா.கிருஸ்ணா   / 2018 பெப்ரவரி 08 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, வாகரை பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தினரால், நேற்று முன்தினம் (08) கசிப்பு உற்பத்தி நிலையங்கள் இரண்டு முற்றுகையிடப்பட்டுள்ளது.

மதுவரித்திணைக்களத்தின் கிழக்கு மாகாண பதில் உதவி ஆணையாளர் என்.சுசாதரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் நடவடிக்கையின் போதே, இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாகரை, கட்டுமுறிவுக்குளம்ஆகிய பகுதியில் முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித்திணைக்களத்தின் கிழக்கு மாகாண பதில் உதவி ஆணையாளர் என்.சுசாதரன் தெரிவித்தார்.

இதன்போது, கசிப்பு காய்ச்சுவதற்காக பயன்படுத்தப்படும் 7900 லீற்றர் கோடா ஏழு பரல்கள் இரு இடங்களிலும் இருந்து மீட்கப்பட்டதாகவும், இது தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X