2025 மே 15, வியாழக்கிழமை

கச்சேரியை முற்றுகையிடும் மக்கள் போராட்டம்

கனகராசா சரவணன்   / 2018 செப்டெம்பர் 29 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, பெரிய புல்லுமலை தண்ணீர் போத்தல் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 04ஆம் திகதி மட்டக்களப்பு கோட்டையிலுள்ள கச்சேரியை முற்றுகையிடும் மக்கள் போராட்டமும் அதனை தொடர்ந்து காந்தி பூங்காவில் இளைளுர் அணித் தலைவர் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகன் தெரிவித்தார்.

இம் மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட படுவான்கரை பிரதேசத்தில் வறட்சிக் காலங்களில் குடிநீருக்கே மக்கள் நீண்டதூரம் சென்று பல்வேறு அசௌகரியங்கள் மத்தியில் நீரை பெறவேண்டியுள்ளது. 

இது அனைவருக்கும் தெரிந்த விடயம், இருப்பினும் அப் பகுதியிலிருந்து தண்ணீர் போத்தல் தொழிற்சாலை அமைத்து அதற்கு தினமும் தண்ணீர் உறுஞ்சப்படுமாயின் எதிர்காலத்தில் மாவட்டத்திலுள்ள மூவின மக்களுக்கும் குடிநீர் இல்லாத  நிலை ஏற்படும் என்பது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை. 

இதற்கு எதிர்புத் தெரிவித்து பல்வேறு கவனயீர்ப்பு போராட்டங்கள், ஹர்தால்கள் செய்தும் இதுவரை அரசாங்கம் மக்களின் இந்த எதிப்புக்கு செவிசாய்க்காமல் செயற்பட்டுவருகின்றமை கவலையளிக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, குடிநீரின்றி எமது எதிர்கால சந்ததியினர் வாழமுடியாது என்பதை சிந்தித்து  அரசியல் வாதிகள் , புத்தஜீவிகள் , பொது அமைப்புக்கள், பொமக்கள் என அனைவரும் கட்சி, மதபோதங்களுக்கு அப்பால் ஒன்றினைந்து இந்த மக்கள் போரட்டத்தில் பங்கு கொள்ளவும் என அவர்  அழைப்பு விடுத்துள்ளார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .