2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கஜமுத்துகளுடன் இருவர் கைது

Editorial   / 2022 ஜனவரி 30 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு, புல்லுமலையில் 80 இலட்சம் ரூபாய் பெறூமதியான இரண்டு கஜமுத்துகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.சுரேஸ்குமார் தெரிவித்தார்.

மகோயாவிலிருந்து  புல்லுமலை விஹாரைக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் குறித்த கஜமுத்துகளை கடத்திக்கொண்டு மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த வேளை, வவுணதீவு விசேட அதிரடிப் படையினரும் கல்லடி கடற்படை வீரர்களும் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடமிருந்து 30.8 கிராம் மற்றும் 4.5 கிராம் எடையுள்ள இரு கஜமுத்துகளும் கடத்தலுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X