2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கஞ்சா, கஞ்சா சுருட்டு வைத்திருந்த இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூலை 31 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கஞ்சாவுடன் வீதியில் நடமாடிய மற்றும்  கஞ்சா சுருட்டு வைத்திருந்த குற்றச்சாட்டில் 02 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

விற்பனைக்காக 4000 மில்லிகிராம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 22 வயதுடைய ஒருவரை ஏறாவூர் மிச்நகர் கிராம  வீதியில்  கைதுசெய்துள்ள அதேவேளை, ஏறாவூர் நகர பிரதான வீதியில் கஞ்சா சுருட்டு வைத்திருந்த குற்றச்சாட்டில் 28 வயதுடைய ஒருவரையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நபர்கள் வீதிகளில் உலாவிக்கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து குறித்த  இடங்;களுக்குச் சென்று சோதனை மேற்கொண்டு சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X