2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கஞ்சாவுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 மே 16 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேரை மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் நேற்று திங்கட்கிழமை காலை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.

ஏறாவூர் ஓடாவியார் வீதியில்; நடமாடிக்கொண்டிருந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவர் 3000 மில்லிகிராம் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டார். இதேவேளை, மாவடிவேம்புக் கிராமத்தில் வீடு ஒன்றில்; 3750 மில்லிகிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 52 வயதுடைய குடும்பஸ்தர் கைதுசெய்யப்பட்டார்.

இந்தச் சந்தேக நபர்களிடம் கஞ்சா இருப்பதாக பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் உரிய இடங்களுக்குச்; சென்று சோதனை மேற்கொண்டபோது இவர்களிடம் கஞ்சா இருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X