2025 மே 06, செவ்வாய்க்கிழமை

’கடந்த அரசாங்கம் தமிழ்மக்களுக்கு நல்லதையே செய்தது’

Editorial   / 2020 மார்ச் 06 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

'கடந்த நல்லாட்சி அரசாங்கம், சிறுபான்மை இன மக்களின் நலன்கள் தொடர்பில் சில இழுத்தடிப்புகளை செய்திருந்தாலும், தமிழ் மக்களுக்கு பல நன்மையான விடயங்களையும் செய்திருந்தது என்றும் ஆனால் இந்த அராசாங்கம் வெறுமனே, பெரும்பான்மையினத்தவர்களை மாத்திரம் திருப்திப்படுத்தும் வகையிலேயே செயற்பட்டு வருவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பலையடித்தோனாவில்,  நேற்று (6) நடைபெற்ற மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், கோட்டாபய ராஜபக்ஷ   ஜனாதிபதியாக வருவதற்கு, சிறுபான்மை இன மக்களின் வாக்குகளும் பங்களிப்பு செய்திருந்தன என்றும் ஆனால் தான் சிங்கள் பௌத்த மக்களால் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டதாகவே, அவர் கருத்து வெளியிட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.

உண்மையில் பெரும்பான்மை மக்களால் கிட்டத்தட்ட 47 சதவீதமான வாக்குகளே அவருக்கு அளிக்கப்பட்டிருந்தன என்றும்  இது 50சதவதீம் எனும் எல்லையைக் கடக்க போதுமானதாக இல்லை என்றும் இருந்தும் சிறுபான்மையினங்களான தமிழ் பேசும் சமுகத்தினர் வழங்கிய 5.25சதவீதமான வாக்குகளே அவர் ஜனாதிபதியாகுவதற்கான அங்கிகாரத்தை வழங்கியதாகவும் தெரிவித்தார்.

இதை மறுத்து வெறுமனே பெரும்பான்மையின மக்களால்தான் ஜனாதிபதியாகியதாகக் கூறி அவர்களை மாத்திரம் திருப்திப்படுத்தும் வகையில், ஜனாதிபதி செயற்பட்டு வருவதாக தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X