2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

Editorial   / 2017 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான், ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கர்பலா பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த கந்தேவத்த கெத்தரமுல்லையைச் சேர்ந்த எஸ்.திலகரத்ன (வயது 44) எனும் பொலிஸ் அதிகாரி, இன்று (14) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தெரிவித்தார்.

காலை வேளைக் கடமைக்காகச் சென்ற மற்றைய பொலிஸ் உத்தியோத்தர், இவர் அசைவற்று சரிந்து இருந்ததைக் கண்டு, அவரை எழுப்பிய போது, அவர் மரணமாகியிருந்தமை தெரியவந்துள்ளது.

சடலம், காத்தான்குடி ஆராத வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு, பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

மாரடைப்புக் காரணமாக குறித்த பொலிஸ் அதிகாரி இறந்திருக்கலாம் எனத் தெரிவித்த காத்தான்குடி பொலிஸார், உடற் கூற்றுப் பரிசோதனையும் மேலதிக விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .