Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 செப்டெம்பர் 21 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய கடல் வளங்களை பேணும் வாரத்தையிட்டு, காத்தான்குடி கடற்கரையோரத்தை சுத்தம் செய்யும் நடவடிக்கை, இன்று (21) நடைபெற்றது.
கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்களம், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, காத்தான்குடி பிரதேச செயலகம், காத்தான்குடி நகரசபை ஆகியன இணைந்து, இதனை ஏற்பாடு செய்திருந்தன.
இந்தச் சுத்திகரிப்பு செய்யும் நடவடிக்கையை, காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் ஆரம்பித்து வைத்தார்.
இதில் காத்தான்குடி பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.ஜரூப், கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவத் திணைக்களம் உத்தியோகத்தர் எம்.எம்.நதீர், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், நகர சபை ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் கருத்துத் தெரிவிக்கையில், “கடற்கரையை சுத்தமாக வைத்திருப்பது நமது பொறுப்பாகும். இதன்மூலம் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய முடியும். கடற்கரைகளில் அசுத்தங்களை ஏற்படுத்தி, அங்கு குப்பைகளை போட்டு மாசுபடுத்துவதால் நமது கடற்கரை வளம் பாதிப்படைகின்றது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .