2025 மே 02, வெள்ளிக்கிழமை

கடற்படை அதிகாரிகள் 13 பேர் குணமடைந்தனர்

Editorial   / 2020 ஜூன் 07 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த 13 கடற்படை அதிகாரிகள் பூரண குணமடைந்து, தியத்தலாவ கடற்படை முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை நிலையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 29 கடற்படை அதிகாரிகள் உட்பட 92 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதில் 13 கடற்படை அதிகாரிகளே பூரண குணமடைந்து, தியத்தலாவ கடற்படை முகாமுக்கு நேற்று (06) இரவு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கடற்படைக்குச் சொந்தமான பஸ்ஸுக்கு கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டு, கடற்படையினரின் பாதுகாப்புடன், இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

தற்போது காத்தான்குடி கொரோனா சிகிச்சை நிலையத்தில் 16 கடற்படை அதிகாரிகளும், குவைத், டுபாய் நாடுகளில் இருந்து இலங்கை வந்து தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு, வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 63 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனரென, காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .