Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
கனகராசா சரவணன் / 2018 மார்ச் 18 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
“கட்சிக்கு கட்டுப்படாமல் எதிராக செயற்படும் உறுப்பினர்களை உடனடியாக உறுப்புரிமையை இல்லாமல் செய்யப்படும்” என, முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில், நேற்று (17) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“கடந்த நாடாளுமன்றத் தேர்தலில். ஒரு இலட்சத்து 27 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உள்ளூராட்சிமன்றத் தேர்தலிலே 80 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருக்கின்றது அதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. அந்த காரணங்களையெல்லாம் ஆராய வேண்டியுள்ளது.
“வாக்குச்சரிவுக்கான காரணங்களை ஆராய்ந்து கொண்டுவருகின்றோம். இருந்தபோதும் இந்தத் தேர்தல் முறை கடும் இறுக்கமானது. எனவே, கட்சிக்கு கட்டுப்படாமல், கட்சிக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்களை உடனடியாக உறுப்புரிமையை இல்லாமல் செய்வதற்கு கட்சி செயலாளருக்கு அதிகாரம் இருக்கின்றது. அதனை மனதில் வைத்து உறுப்பினர்கள் செயற்படவேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago