Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 12 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவு புதிய காத்தான்குடி 6இல் உள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமை அலுவலகத்தின் மீது, இன்று திங்கட்கிழமை அதிகாலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேரக் கணிப்புக் குண்டு மூலமே, இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு குற்றத்தடயவியல் பிரிவு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குண்டுவெடிப்பில் அலுவலகத்துக்கு சிறிதளவான சேதமும் ஏற்பட்டுள்ளது.
இன்று (12) அதிகாலை 3.50 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற கட்சி அலுவலகத்துக்குச் சென்ற காத்தான்குடி பொலிஸார் ,விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர், மட்டக்களப்பு குற்றத் தடயவியல் பிரிவினர் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேற்படி கட்சி அலுவலகத்தில் வெடிக்காத நிலையிலும் சில நேரக் கணிப்புக் குண்டுகள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட ஏனைய 9 குண்டுகளும் வெடித்திருந்தால் அப்பகுதியில் பாரிய சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 May 2025
18 May 2025
18 May 2025