2025 மே 19, திங்கட்கிழமை

‘கட்சித் தாவல், வாக்குகளில் சரிவை ஏற்படுத்தாது’

Editorial   / 2018 பெப்ரவரி 06 , பி.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம்

பட்டிருப்புத் தொகுதியின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைப்பாளர் இரா.சாணாக்கியன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தாவிக்கொண்டமை, மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் மக்களின் வாக்குகளில் சரிவை ஏற்படுத்தாது” என்று, மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் ரீ.கெங்காதரன் ​தெரிவித்தார்.

“நல்லாட்சிக்கு அவருடைய பங்களிப்பு இல்லையென்பதை உண்மையில் அது எடுத்துக்காட்டுகின்றது” எனவும் அவர் தெரிவித்தார்.  

அவரது அலுவலகத்தில் இன்று (06) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“நாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், நல்லாட்சி மிக்க நாட்டை கட்டியெழுப்புவதில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில், நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.ஊழல் எனும் வார்த்தைக்கு, நாட்டில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. யாவரும் அறிந்த உண்மையாகும்.

“ஜனாதிபதியோடு இணைந்து சாணாக்கியன் பணியாற்ற முடியாமல் போனது கவலையளிக்கும் செயற்பாடாகவே நான் கருதுகின்றேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X