2025 மே 14, புதன்கிழமை

கணவனின் சடலம் மீட்பு; மனைவி கைது

Editorial   / 2019 ஜனவரி 15 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

சந்தேகத்துக்கிடமான முறையில் வீட்டிலிருந்து கணவனின் சடலம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளாரென, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வந்தாறுமூலை, மூங்கிலடி வீதியை அண்டியுள்ள வீட்டிலிருந்து 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா கலைச்செல்வன் (வயது 35) என்பவரின் சடலம் மீட்கப்பட்டு, சட்ட வைத்திய உடற்கூறாய்வுக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது விடயமாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், நேற்று (14) சந்தேகத்தின் பேரில் மனைவியைக் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள முறக்கொட்டாஞ்சேனை கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து, ஒரு பிள்ளையின் தாயான செல்லத்தம்பி புஸ்பராணி (வயது 26) என்பவர், நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலும் ஏறாவூர் பொலிஸ் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .