2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கணவனை கட்டிவைத்து: மனைவியிடம் அபகரிப்பு

Editorial   / 2022 ஜனவரி 13 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கனகராசா சரவணன் 

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் பொலிஸ் சிஜடி என கூறி கடந்த 5 ஆம் திகதி வீடொன்றுக்குள்  நுழைந்த கொள்ளையர்கள், அவ்வீட்டிலிருந்து ஆண் ஒருவரை கட்டிவைத்துவிட்டு அவரின் மனைவியிடமிருந்து பெறுமதியான பொருட்களை அபகரித்து சென்றுள்ளனர்.

காதில் இருந்த தோடுகள், தங்க சங்கிலி உட்பட இரண்டரை பவுண் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

அவ்வாறு கொள்ளையில் ஈடுபட்ட 6 பேரை நேற்று (12) புதன்கிழமை   கைது செய்துள்ளதுடன் கார் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளையடிப்பதற்காக, பயன்படுத்திய கோடரி ,கத்தி 3 கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை மீட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பி.எஸ்.பி பண்டார தெரிவித்தார்.

விசாணையில் அவர்கள் வழங்கிய தகவலுடன் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து  சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்கவின் ஆலோசனைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் பி.எஸ்.பி பண்டார தலைமையிலான பொலிஸார் சம்பவதினமான நேற்று புதன்கிழமை   ஓட்டுமாவடி, கிரான் பிரதேச  செயலக பிரிவிலுள்ள வட்டவான். மற்றும் வெல்லாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தனர்.

இதில் 31,34,29 மற்றும் 31 வயதுடையவர்கள் கைது செய்துள்ளதாகவும் இவர்கள் கடந்த காலத்தில் குற்றச் செயல் காரணமாக கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த போது 4 பேரும் நண்பர்களாகி சிறையில் இருந்து வெளியில் வந்ததும் கொள்ளையடித்துவருகின்றனர். அதற்காக காரொன்றையும் வாடகைக்கு அமர்த்தியுள்ளனர்.

 கொள்ளையடித்த தங்க ஆபரணங்களை பினாஸ்கம்பனி ஒன்றில் ஒரு இலச்சத்து 91 ஆயிரம் ரூபாவுக்கு ஈடுவைத்து அந்த பணத்தை பங்கு கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.    கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X