Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
வா.கிருஸ்ணா / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள அமைப்புகளுக்கு வழங்கப்படும் கொந்துராத்து (ஒப்பந்த) வேலைகள், உப கொந்துராத்துக்காரர்களுக்கு வழங்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த அமைப்பு, கறுப்புப் பட்டியலுக்குள் உள்வாங்கப்படுமென, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள கிராம அபிவிருத்தி சங்கங்கள், சமுர்த்தி சமூதாய அடிப்படை அமைப்புகள், மீனவ சங்கங்கள், முதியோர் சங்கம் போன்ற அமைப்புகளுக்கு பிரதேச செயலாளரால் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“கிராமமட்ட அபிவிருத்தியை இலக்காக் கொண்டு, கிராமமட்ட அமைப்புகளுக்கு கொந்துராத்துகளை வழங்குகின்ற நடைமுறை இருந்து வருகின்ற நிலையில், பெரும்பாலான கிராமமட்ட அமைப்புகள் தங்களுக்கு வழங்கப்படும் கொந்துராத்துகளை இன்னுமோர் உபகொந்துராத்துக்கு வழங்கிவருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
“இதனால் ஒரு சமூகத்துக்குக் கிடைக்கும் நன்மைகள், தனியொருவருக்குச் செல்லும் நிலையேற்பட்டுள்ளன.
“அத்தோடு, பல மில்லியன் ரூபாய் கொந்துராத்து வேலைகளைச் செய்யும் கிராமமட்ட அமைப்புகளின் கூரைகள் மழை காலங்களில் ஒழுக்கு நிறைந்ததாகவும், மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள் இல்லாத நிலையிலும் உரிய பாதுகாப்பு வேலிகளும் கதவுகள் இல்லாத நிலையிலும் காணப்படுகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இதனடிப்படையில், இந்த ஆண்டு தொடக்கம் கொந்துராத்து வேலைகளைச் செய்யும் அமைப்புகள், சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
“மேலும், கொந்துராத்து வேலைகள் கிராமமட்ட அமைப்புகளுக்கு வழங்கப்படும்போது, அந்த கொந்துராத்துகள், உபகொந்துராத்துக்கு வழங்கப்படக்கூடாதென்றும், அவ்வாறு வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த அமைப்பு கறுப்புப் பட்டிலுக்குள் உள்வாங்கப்படும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
8 hours ago
8 hours ago