2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கல்லடிக் கடற்கரையை புனரமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, கல்லடிக் கடற்கரைப்பகுதியை  சுற்றுலா இடமாக அபிவிருத்தி செய்வதற்கு 48 மில்லியன் ரூபாய்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

கல்லடிக் கடற்கரையில் உணவகத்தை  திறந்துவைத்து இன்று செவ்வாய்க்கிழமை திறந்துவைத்து உரையாற்றியபோதே, அவர் இதனைக் கூறினார்.

சமூக ரீதியான பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்டமைக்கமைய சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் நிதி உதவியுடன் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை நிலைமையும் குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகமாகக் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X