2025 மே 07, புதன்கிழமை

கலாசாரகூடம் திறந்து வைப்பு

Editorial   / 2020 ஜனவரி 28 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலாசார கூடம், மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவினால் நேற்று (28)  திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது, தைப் பொங்கல் விழாவும் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பழம் பெரும் தொன்மையை பிரதிபலிக்கின்ற பொருள்கள், கலை, கலாசாரத்துடன் தெடர்புபட்ட பொருள்களும் இங்கு காட்சிக்கு  வைக்கப்பட்டுள்ளன.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில், கலாசார திணைக்களகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரும் பொருள்களைக் காட்சிப்படுத்தும் முகமாக இந்தக் கலாசார கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X