Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2019 ஜனவரி 15 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம். அஹமட் அனாம், ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு, கல்குடாத் தொகுதியை மையப்படுத்தி, புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள நீர்ப்பாசனப் பொறியிலாளர் அலுவலகத்தின் மூலம் 30,000 ஏக்கர் விவசாயம் செய்யும் தமிழ், முஸ்லிம் சமூகம் நன்மையடையவுள்ளதாக, விவசாய, நீர்பாசன மற்றும் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
இதற்கான ஆரம்பக் கூட்டம், வாழைச்சேனை கமநல சேவைகள் காரியாலயத்தில் நேற்று (14) மாலை நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்கெனவே 02 நீர்ப்பாசனக் காரியாலயங்கள் இருக்கும் நிலையில், விவசாயிகளின் நன்மை கருதி, கல்குடாத் தொகுதியை மையப்படுத்தி, புதிய நீர்ப்பாசன காரியாலயம் அமையப்பெறவுள்ளது.
இதனால் வாகனேரி, கட்டுமுறிவு, வடமுனை, புனானை மேற்கு நீர்பாசன குளங்கள் புணரமைப்புச் செய்யப்படுவதுடன், நேரடியாக 11,800 ஏக்கர் வயல்காணிகள் பயனடைவதுடன், எதிர்காலத்தில் மேலும் 11,000 வயல்காணிகளில் நெற்செய்கை மேற்கொள்வதற்கும் இத்திட்டம் உதவியாக இருக்குமெனவும், இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் ஊடாக விவசாயிகள் அடையவுள்ள நன்மைகள் தொடர்பாக, நீர்ப்பாசத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
35 minute ago
44 minute ago