2025 மே 21, புதன்கிழமை

கல்முனையில் கைத்துப்பாக்கி மீட்பு; ஒருவர் கைது

Editorial   / 2017 ஒக்டோபர் 04 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், அஸ்லம் எஸ்.மௌலானா, கனகராசா சரவணன்

கல்முனை பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் இருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் வீட்டின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்றுச் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் கல்முனை புறநகர் பகுதியில் சிங்கள மகா வித்தியாலயம் மற்றும் பௌத்த விகாரை என்பன அமைந்துள்ள பன்சலை வீதியில் அமைந்துள்ள குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டு, சோதனையிடப்பட்டபோதே, அங்கு கைத்துப்பாக்கியொன்று கண்டுபிடிக்கப்பட்டதாக, கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

இத்துப்பாக்கியுடன் 8 ரவைகள் மற்றும் கூரிய வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது 32 வயது நிரம்பிய பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டில் கடந்த பல மாதங்களாக சட்ட விரோதமாக மதுபான விற்பனை இடம்பெற்று வந்திருப்பதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

பொலிஸ் புலனாய்வு விசாரணைகள் நிறைவுற்ற பின்னர் குறித்த சந்தேகநபர்,கல்முனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .