2025 மே 13, செவ்வாய்க்கிழமை

‘கல்வி வீழ்ச்சிக்கு பொறுப்புக் கூறுங்கள்’

பேரின்பராஜா சபேஷ்   / 2019 பெப்ரவரி 21 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணம், கல்வி நிலையில் மிகவும் பின்தள்ளப்பட்டுள்ளமைக்கு, மாகாணத்தின் வினைத்திறனற்ற கல்வித் தலைமைத்துவம் பொறுப்புக் கூறவேண்டுமென, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. .

கிழக்கு மாகாண கல்வி வீழ்ச்சி தொடர்பாக, இச்சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன், இன்று (21) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அண்மையில் வெளியாகிய க.பொ.த (உயர்தரம்) பரீட்சை முடிவுகளின் படி, மாவட்ட ரீதயில் வர்த்தகப் பிரவில் மட்டக்களப்பு மாவட்டம் 20ஆவது நிலையையும் திருகோணமலை மாவட்டம் 23ஆவது நிலையையும், அம்பாறை மாவட்டம் 25ஆவது நிலையையும்; கலைப்பிரிவில் திருகோணமலை மாவட்டம் 22ஆவது நிலையையும் மட்டக்களப்பு மாவட்டம் இறுதி நிலையான 25ஆவது நிலையையும் நோக்கிப் பின்தள்ளப்பட்டுள்ளதாக, சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதிபெற்றுள்ள மாவட்டங்களில், மட்டக்களப்பு மாவட்டம் 23ஆவது நிலையையும் திருகோணமலை மாவட்டம் 25ஆவது நலையையும் அடைந்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திறமை அடிப்படையில் மருத்துவம், பொறியியல் துறைகள் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் பெரும் பின்னிடைவைக் கண்டுள்ளன எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் கல்விப் புளத்தில் அதிகாரப் போட்டி உச்ச வரம்பை எட்டியுள்ளதாகவும், கிழக்கு மாகாண புதிய ஆளுநரும் கல்வியை அரசியல் மயப்படுத்துவதையும், தமது சங்கம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், அந்த அறிக்கையில் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X