2025 மே 15, வியாழக்கிழமை

கழிவகற்றல் தொடர்பில் கலந்துரையாடல்

Editorial   / 2018 நவம்பர் 11 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. விஜயரெத்தினம்

மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் தி.சரவணபவனின் அழைப்பின் பெயரில் சிங்கப்பூர் பிரதி உயர்ஸ்தானிகர் அமீர் அஜ்வாத், மட்டக்களப்பு மாநகர சபைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். 

இச்சந்திப்பின்போது, கழிவகற்றல் விடயங்களில் மட்டக்களப்பு மாநகர சபை எதிர்நோக்கும் சவால்கள், அவை தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கத்தின் அனுகுமுறைகள் பற்றியும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது, மட்டக்களப்பு மாநகரசபையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவரும் மக்களின் சிரமங்களைக் குறைத்து, துரித சேவைகளை வழங்கும் நோக்கில், சிங்கப்பூர் தகவல் தொழிநுட்பம்சார் நிறுவனங்களின் உதவிகளைப் எதிர்காலத்தில் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும், திட்டமொழிவுகள் பரிமாறப்பட்டன.  

மேலும், மட்டு. மாநகரை அழகுபடுத்தல், துரித அபிவிருத்தித் திட்டங்களில் முதலீட்டாளர்களை உள்ளீர்த்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .