Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 21 , பி.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, அஸ்லம் எஸ்.மௌலானா
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில், அம்பாறை மாவட்டத்தின் கழிவுகளைக் கொட்ட எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, அப்பகுதியில் இன்று (21) பதற்ற நிலைமையேற்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில், கல்முனை மாநகரசபையால், நேற்றுக் காலை குப்பைகள் கொட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதனாலேயே, இந்தப் பதற்ற நிலமையேற்பட்டது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.கணேசன், கல்லாறு பிரதேச மக்கள் குறித்த பகுதியில் அம்பாறை மாவட்ட குப்பைகள் கொட்டுவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.
பெரியகல்லாறு பகுதியில், அப்பகுதி மக்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், கல்முனை நகரசபையால் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலையத்தை அகற்றுமாறு, கடந்த காலத்தில் பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டபோதிலும் அது கவனத்தில் கொள்ளப்படாமல் தொடர்ச்சியாக குறித்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படுகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்துக்குரிய எல்லைப் பகுதியில் இவ்வாறான செயற்பாடுகளை, அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபை மேற்கொள்வது தொடர்பில், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்திலும் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்திலும் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதுடன், குறித்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவது நிறுத்தப்படவேண்டுமென்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், அனைத்து எதிர்ப்பையும் மீறி, பெரியகல்லாறு பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிராக, பிரதேசசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்ததுடன், கல்முனை மாநகர மேயரும் வருகைதந்து, பொதுமக்களுடன் வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago