2025 மே 21, புதன்கிழமை

கவியரங்கம்: ’சமுர்த்தி திட்டங்களும் அதன் பயன்பாடுகளும்’

பி.எம்.எம்.ஏ.காதர்   / 2017 ஒக்டோபர் 02 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவின் மருதமுனை, நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் 'சமுர்த்தி திட்டங்களும் அதன் பயன்பாடுகளும்' என்ற தொனிப் பொருளில், சமுர்த்தி பயனாளிக் கவிஞர்களின் கவியரங்கம், மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நாளை (03) பிற்பகல்3.30 மணிக்குநடைபெறவுள்ளது.

நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் சட்டத்தரணி மீராமுகைதீன் முஹம்மட் முபீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மட் கனி, கௌரவ அதிதிகளாக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.இராசதுரை, கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

சிறப்பு அதிதிகளாக சமுர்த்தி சிரேஷ்ட தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர் எம்.சாலிஹ் ,நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.எச்.மபாஸ், திட்ட முகாமையாளர் ஏ.எம்.எஸ்.நயீமா, முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.எஸ்பரீரா, சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.சதீஸ் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.

சமுர்த்தி கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் கவித்தென்றல் ஏ.எல்.ஐ.ஹூசையின் தலைமையில் கவியரங்கு நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .