2025 மே 13, செவ்வாய்க்கிழமை

காட்டிக்கொடுத்த அரசியல் தேவையா?

Editorial   / 2021 நவம்பர் 09 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

ஏதாவது சலுகைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் காட்டிக் கொடுத்து, ஜனாசாக்கள் எரிப்பதை அழகு பார்த்த அரசியல், இந்தச் சமூகத்துக்குத் தேவையா என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கேள்வியெழுப்பினார்.

அ.இ.ம.கா தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நாடளாவிய ரீதியில் தனது ஆதரவாளர்கள், கட்சித் தொண்டர்கள் ஆகியோரை சந்தித்து வருகின்றனார்.

இந்நிலையில், ஓட்டமாவடியில் அமீர் அலியின் இல்லத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு போது, அமீர் அலிமேற்கண்டவாறு  கேள்வியெழுப்பினார்.

அங்கு அவர் மேலும் கருத்துரைக்கையில், “அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் பாராளுமன்ற உறுப்பினராகக் கொண்டு வந்து அழகு பார்த்தோம். தற்போது அவர்களே தலைமைக்கும், கட்சிக்கும் வில்லான செயற்படுகின்ற ஒரு காலகட்டத்தை நாங்கள் கண்டோம்.

“எங்களிடத்தில் ஒரு கதை, அரசியல் தலைவர்களிடத்தில் காட்டிக் கொடுப்புச் செய்தார்கள். 350 மேற்பட்ட ஜனாசாக்களை எரித்து அழகு பார்த்து, எமது ஒட்டுமொத்த சமூகத்தையும் சீர்குலைத்து சின்னா பின்னமாக்க வேண்டும் என்கின்ற நிலவரத்தில் இருந்த பொழுதும் கூட எங்களுடைய உறுப்பினர்கள் அவர்களுக்கு கூஜா தூக்கிய நிகழ்வை முஸ்லிம் சமூகம் இலகுவில் மறந்துவிடக் கூடாது” என்றார்.

இந்த மக்கள் சந்திப்பில் ரிஷாட் பதியுதீன் எம்.பி, முன்னாள் பிரதி அமைச்சர் எஸ்.கணேசமூர்த்தி, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X