Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 26 , பி.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில், எம்.எஸ்.எம். ஹனீபா
சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள எல்லைக் கிராமங்கள், காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதனால், இப்பகுதி மக்கள் இரவு வேளைகளில் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
சம்மாந்துறை, அலவாக்கரை பிரதேசத்தில் இன்று (26) அதிகாலை சுமார் 2.15 மணியளவில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள், வீட்டு சுவர்கள் மற்றும் வீட்டுத்தோட்டங்களை சேதப்படுத்தியுள்ளன.
இந்த தாக்குதலால், ஒரு வீட்டின் கூரை உட்பட வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் வீட்டுத்தோட்டங்களும் சேதமாக்கியுள்ளன.
அந்நேரம் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள், அதிஸ்ட்டவசமாக உயிர் தப்பியதாகவும் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை மற்றும் நேற்றும் சம்மாந்துறை பிரதேசத்தில் யானையின் தாக்குதலினால் பல வீடுகள் சேதத்திற்குள்ளாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சம்மாந்துறை சமிடபுரம் உடங்கா - 2 கிராமத்தில் உள்ள அரிசி ஆலையொன்றும் யானைத்தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. குறித்த ஆலையினுள் இருந்த நெல் மூடைகளையும் யானைகள் சேதப்படுத்தியுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாக, சம்மாந்துறை பிரதேச மக்கள் குறித்த அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தும், இதுவரை எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என, மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
சம்மாந்துறை பிரதேசத்தில் வேளாண்மை அறுவடைக்குப் பின்னரான காலத்திலேயே இந்த காட்டு யானைகளின் தொல்லை ஊருக்குள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago